வைரமுத்து சிறுகதைகள்... கருணாநிதி வெளியிட கமல் ஹாஸன் பெறுகிறார்!
கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலைக் திமுக தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார். நடிகர் கமல்ஹாசன் முதல் படியைப் பெற்றுக் கொள்கிறார்.
அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் நடக்கும் விழாவில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.

டாக்டர் சுதா சேஷய்யன், பேராசிரியை பர்வீன் சுல்தானா இருவரும் சிறுகதைகளைத் திறனாய்வு செய்து பேசுகிறார்கள்.
ஒரே பத்திரிகையில் ஒரே எழுத்தாளர் 40 வாரங்கள் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியது இதுவே முதல் முறையாகும்.
வெளிவந்துகொண்டிருந்தபோதே இதில் சிலகதைகள் தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடங்களாக இடம்பெற்றிருக்கின்றன. எம்ஃபில் ஆய்வு செய்வதற்காகப் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது கவிஞர் வைரமுத்துவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. கருணாநிதி வெளியிடும் கவிஞர் வைரமுத்துவின் 17ஆவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
"புதுமைப்பித்தன் இறந்த ஆண்டில்தான் நான் சிறுகதை எழுத வந்தேன் என்ற ஜெயகாந்தன் வாக்குமூலத்தைப்போல, ஜெயகாந்தன் வாழ்ந்த இறுதி ஆண்டில்தான் நான் சிறுகதை எழுத வந்தேன். என் முன்னோடிகளால் எழுதப்படாத மிச்சத்தையும், அவர்களால் வாழப்படாத வாழ்க்கையையும் என் சிறுகதைகளில் நான் கலைப்படுத்தியிருக்கிறேன். இது பத்து மாதங்களில் எழுதப்பட்டதுதான்; ஆனால் இதை எழுதுவதற்குக் காலம் என்னை 60 ஆண்டுகள் தயாரித்திருக்கிறது. இதில் புத்தரையும் எழுதியிருக்கிறேன்; கசாப்புக் கடைக்காரனையும் எழுதியிருக்கிறேன். வாழ்க்கை இரும்படித்துக் கொண்டிருக்கும்போது இலக்கியம் பூப்பறித்துக் கொண்டிருக்கமுடியாது. அதனால் எரியும் பிரச்சனைகளும் எழுதப்பட்டுள்ளன. கெளரவக் கொலைகள் என்று தப்பாக உச்சரிக்கப்படும் காதல் கொலைகள் முதல் இலங்கை இனப்படுகொலை வரை எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு சிறுகதையையும் பத்துமுதல் பன்னிரண்டுமுறை திருத்தியிருக்கிறேன்; வார்த்தைகளைத் தங்க நாணயம்போல் செலவழித்திருக்கிறேன்," என்று தம் சிறுகதை அனுபவங்களைப் பற்றிச் சொல்லுகிறார் கவிஞர் வைரமுத்து.
வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார், வெங்கடேஷ், தியாகராஜா, தமிழரசு, வேலு, ராஜசேகர், மாந்துறை ஜெயராமன், செல்லத்துரை, கணேஷ் பாபு ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications