நாளை உயர்நீதிமன்றத்திற்கு வருகிறார் கருணாநிதி.. அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தன் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக நாளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவுள்ளதால், கோர்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மந்திரி தந்திரி என்ற பெயரில் திமுக தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அது முரசொலிப் பத்திரிகையில் கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி வெளியானது. அதில் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி.

இதுதொடர்பாக கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குப் போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆஜராக கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் சார்பில் வக்கீல் ஆஜராகி இடைக்கால தடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கருணாநிதி நானே நேரில் ஆஜராவேன் என்று அறிவித்தார். அதன்படி நாளை காலை 10.30 மணிக்கு கோர்ட்டுக்கு செல்கிறார். அவர் ஆஜராகும் செசன்ஸ் கோர்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் முதல் மாடியில் உள்ளது.
இந்த கோர்ட்டுக்கு சாய்வு தளம் வழியாக லிப்டில் சென்று முதல் மாடியில் உள்ள கோர்ட்டுக்கு செல்ல வசதி உள்ளது. எனவே இதன் மூலமாக கருணாநிதி நாளை கோர்ட்டுக்குள் சென்று நீதிபதி முன்பு ஆஜராகிறார்.
கருணாநிதி கோர்ட்டுக்கு வருவதையொட்டி அதிமுகவினர் பெருமளவில் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே குவியவுள்ளனர். இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறதாம்.
-
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்!












Click it and Unblock the Notifications