இந்திய மீனவர்களுக்கு சிறை; இலங்கை மீனவர்களுக்கு உதவியா? கருணாநதி வேதனை
சென்னை: இலங்கை மீனவர்களிடம் இந்திய அரசு காட்டுகின்ற அக்கறையை தமிழக மீனவர்களிடமும் காட்டிட வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவிலே உள்ள தமிழக மீனவர்களின் அடுக்கடுக்கான துன்பங்களுக்கு நிரந்தரமாக முடிவு கட்டி முழுமையான தீர்வு காண முயற்சி எடுக்காத இந்திய அரசு, இலங்கை மீனவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி, படகுகளையும், கருவிகளையும் வழங்கிட முன் வந்திருப்பது தமிழக மக்களுக்கும், குறிப்பாக மீனவர்களுக்கும் மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

இலங்கைச் சிறையிலே உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாக்கப்படுவதை நிறுத்தவும், தமிழகத் தலைவர்கள் பல முறை இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை.
இலங்கை அரசாக நினைத்துக் கொண்டால் சில மீனவர்களை விடுவிப்பார்கள். ஆனால் அவர்களின் படகுகளைத் திரும்பத் தர மாட்டார்கள். இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட எத்தனையோ முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப் படவில்லை. இலங்கை மீனவர்களிடம் இந்திய அரசு காட்டுகின்ற அக்கறையை தமிழக மீனவர்களிடமும் காட்டிட வேண்டுமென்று தான் திரும்பத் திரும்ப மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications