அதிமுகவினர் அராஜகம்- வைகோவின் பெருந்தன்மை: கருணாநிதி பெருமிதம்!
சென்னை: தன் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ பெருந்தன்மையோடு கேட்டுக் கொண்டிருப்பதை உணர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் வடிவிலான அறிக்கை விவரம்:

வைகோ பெருந்தன்மை
கேள்வி:- ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து, கலிங்கப்பட்டியில் அ.தி.மு.க.-ம.தி.மு.க. இடையே மோதல் ஏற்பட்டுள்ளதே?.
பதில்:- வைகோ கூட தன் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்த அ.தி.மு.க.வினர் மீது கட்சிக்காரர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாமென்று பெருந்தன்மையோடு கேட்டுக் கொண்டிருக்கிறார். வைகோ வீட்டு வாசலிலே உண்ணாவிரதம் இருக்க காவல் துறையினர் அனுமதி அளித்தது யாருடைய தவறு?.
அதுபோலவேதான் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று என் வீட்டிற்கே 200 அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து வீட்டிற்குள் கல்லெறிந்து தாக்குதல் நடத்திவிட்டு, அவர்களே நேராக ராயப்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று, நான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டியதாகப் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
சென்னையில்...
கேள்வி: ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனையைக் கண்டித்து அ.தி.மு.க.வினர் காவல் துறையின் அனுமதி பெறாமலே, தாங்கள் நினைத்த இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் என்று கூறிக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதைப் பற்றி?.
பதில்:- சென்னை மாநகரில் பொதுப் பிரச்சினைகளுக்காகவோ, இலங்கைப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை போன்றவைகளுக்காகவோ எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு போராட்டம் நடத்த முன்வந்து, அதற்காகக் காவல் துறையினரிடம் அனுமதி கேட்டால், அந்தப் போராட்டங்களை சென்னை மாநகரில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே அதாவது வள்ளுவர்கோட்டம், மற்றொன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்தான் உண்ணாவிரதங்களையோ, போராட்டங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்த அனுமதி வழங்குவார்கள்.
இது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும். ஆனால் கடந்த ஒரு வார காலமாக இந்த விதி ஆளுங்கட்சி சார்பில் நடத்துகின்ற போராட்டங்களுக்கு கடைப்பிடிக்கப்படுகிறதா? ஆளுநர் வீட்டு வாசலிலும், ஏன் ஜெயலலிதா வீட்டு வாசலில், பிரதான சாலையில், பெண்கள் கல்லூரிக்கு அருகில், போக்குவரத்து அதிகமாக உள்ள இடத்தில் ஆளுங்கட்சியினர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
வேலூர் நகராட்சி மன்றத்தில் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். சென்னை மாநகராட்சி மன்ற மேயரே மாநகராட்சி மன்றத்தில் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்தும் என்னைத் தாக்கியும் பேசுகிறார். அதைப்பற்றிக் கேள்வி கேட்ட தி.மு.க. உறுப்பினர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் என்ன வகை ஜனநாயகமோ?.
என்.எல்.சி. தொழிலாளர் போராட்டம்..
கேள்வி: நெய்வேலியில் என்.எல்.சி.யில் தொழிலாளர்கள் போராட்டம் தொடருகிறதே?.
பதில்: நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் 30 நாட்களாகப் போராடி வருகிறார்கள். அவர்களுக்காக அனைத்துக் கட்சியினரும் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறார்கள். இனியும் அவர்களின் போராட்டம் நீடிப்பதைப் பார்த்துக் கொண்டிராமல், பிரச்சினையைப் பரிவுடன் தீர்க்க மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டுமென்று கோரிப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.
தமிழக அரசு ஒத்துழைப்பு இல்லை..
கேள்வி: மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய அரசின் செயலாளர் ஒருவர் பேசியிருக்கிறாரே?.
பதில்: மத்திய அரசின் கப்பல் துறைச் செயலாளர் விஸ்வபதி திரிவேதி சென்னையில் இந்தியா-மியான்மர் இடையே வர்த்தக சரக்குப் போக்குவரத்துக் கப்பல் துவங்கும் நிகழ்ச்சியிலே கலந்து கொண்ட போது, "மத்திய அரசின் திட்டமான சென்னை - மதுரவாயல் - எண்ணூர் மேம்பாலத் திட்டம், இந்திய கடல்சார் பல்கலைக்கழகக் கட்டிடம் திறப்பு உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை" என்றும், "இது குறித்து பல முறை அரசுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது" என்றும் பேசியிருக்கிறார்.
மத்திய ரயில்வே அமைச்சரும், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்குத் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்!












Click it and Unblock the Notifications