ஒருதலைக்காதலுக்கு விடை கொடுங்கள்... கருணாநிதி
சென்னை: ஒருதலை காதலுக்கு தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுப்பார்கள், கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒருதலைக் காதல் வயப்படும் பல இளைஞர்களில் சிலர், தான் விரும்பும் பெண்ணை அடைய வேண்டும் அல்லது அந்த பெண்ணை கொன்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன் விளைவாக பல கொலைகள் நடக்கின்றன. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இளைஞர்களுக்கு முகநூல் வழியாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் எழுதியுள்ள பதிவில், ஒருதலை காதலுக்கு தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுப்பார்கள், கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஒருதலை காதலுக்கு மற்றும் ஓர் இளம்பெண் பலியாகி இருக்கிறாரே? அண்மைக்காலத்தில் இது ஐந்தாவது பலி.
சென்னையில் சுவாதி, விழுப்புரத்தில் நவீனா, கரூரில் சோனாலி, தூத்துக்குடியில் பிரான்சினா, தற்போது விருத்தாசலத்தில் புஷ்பலதா. இந்த ஐந்து பெண்களின் மரணத்துக்குப் பிறகாவது ஒருதலை காதலுக்கு தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுப்பார்கள், கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பலியான பெண்களின் குடும்பங்களுக்கு அரசினர் உரிய உதவித்தொகையை விரைவில் அளிக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications