For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறந்த பின்னும் 14 மணி நேரம் போராடி வென்ற கருணாநிதி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழுடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Rajeswari
Google Oneindia Tamil News

Recommended Video

    இதுவே முதல் முறை | இறந்த பின்னும் 14 மணி நேரம் போராடி வென்ற கருணாநிதி- வீடியோ

    சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழுடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரது உடலை அண்ணாவை அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே அடக்கம் செய்ய உத்தரவை பிறப்பித்தது. இதனால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர், கலைஞருக்கு இட ஒதுக்கீடு கிடைத்து விட்டது.

    இறந்த பின்னும் 14 மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு அவருக்கு கிடைத்த வெற்றி இது.

    Karunanidhi wins battle even after death

    நீதிமன்ற உத்தரவையடுத்து ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் பெருக தொண்டர்களை நோக்கி வணங்கினார்.

    கதறி அழுதபடி நன்றி தெரிவித்த மு க ஸ்டாலின் மீண்டும் தனது தந்தை கருணாநிதி அவர்களை சந்திக்க திரும்பிய பொழுது தள்ளாடி விழப் பார்த்தார். அவரை அருகில் இருந்த ஆ.ராசா மற்றும் துரைமுருகன் ஆகியோர் தாங்கிப் பிடித்தனர்.

    எங்களால் பெற முடியவில்லை; அரசாங்கத்தால் தர முடியவில்லை, வாழ்நாளெல்லாம் போராடிய தலைவர், மரணத்துக்குப் பிறகும் 14 மணி நேரம் போராடி வென்றிருக்கிறார் என கூறியுள்ளார் துரை முருகன்.

    English summary
    DMK supremo Karunanidhi, the tall leader who fought all his life has won 14 hours after his death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X