தமிழகத்தில் அரசு இயந்திரம் முடங்கிவிட்டது: குடியரசுத்தலைவருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் குடியரசுத்தலைவருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடிதம்: பெங்களூருவில் நடந்த, சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா மற்றும் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.

ஆளும் அ.தி.மு.க.,வினர், தி.மு.க., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று, தாக்குதல் நடத்துகின்றனர்.அவர்கள், பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமியின், சென்னை வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் சொத்துக் குவிப்பு வழக்கின் மனுதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அ.தி.மு.க.,வினர், அப்பாவி மக்களை தாக்கி, அவர்களின் உடமைகளை சேதப்படுத்தி, மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். அ.தி.மு.க.,வினர் வன்முறையில் ஈடுபடுவதை, போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர். இதனால், தமிழகத்தில், அரசு இயந்திரம் முற்றிலும் செயல் இழந்துள்ளது.
வன்முறையில் ஈடுபடுவோர் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பவர்.எனவே, உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, போலீஸ் அதிகாரிகள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்தின் நகல், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய உள்துறை அமைச்சர், உள்துறை செயலர், தமிழக கவர்னர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைச் செயலர், தமிழக உள்துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications