For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நல்லாருக்கீங்களா சார், வெளில போங்க சார்...நகராட்சி சேர்மனை டீசன்ட்டாக விரட்டிய கரூர் கலெக்டர்!

|

கரூர்: வேட்புமனு தாக்கலின் போது, நைசாக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த கரூர் நகர் மன்ற தலைவர் செல்வராஜை கரூர் கலெக்டர் ஜெயந்தி வெளியே போங்க சார் என்று கூறி நாகரீகமாக வெளியே அனுப்பிவைத்தார்.

கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தனது வேட்புமனுவை , தமிழக போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மன்றும் கழக நிர்வாகிகள் சகிதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்ய கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தார்.

Karur collector Jayanthi shows the door to the Municipal chairman decently

அப்போது, அவர் கரூரில் உள்ள அண்ணா சிலை, பெரியார் சிலை , எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு வந்தார். இந்த நிலையில், இதய கோளாறு காரணமாக ஆபரேசன் செய்துள்ள கரூர் நகர் மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், வெயில் காரணமாக, அவர்களுடன் செல்லாமல், முன் எச்சரிக்கையாக கரூர் கலெக்டர் அலுவலம் வந்து, வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் நின்று கொண்டார்.

அப்போது, கரூர் கலெக்டர் ஜெயந்தி, கரூர் நகர் மன்ற தலைவரிடம், நாகரீகமாக உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு, சார், வேட்பாளருடன் 4 பேர் வரலாம். அதில் உங்க பெயர் இருக்கா என கேட்க, நகர் மன்ற தலைவர் பேந்த பேந்த வழிக்க.. அப்படினால், கொஞ்சம் வெளியே இருங்க சார்.... என நைசாக அவரை வெளியேற்றினார்.

அவருடன் நாமும் உள்ளே சென்றுவிடலாம் என தொகுதி பொறுப்பாளர் ஒருவர் செல்ல அவருக்கும் அதே ஸ்டைல் அணுகுமுறையை காட்டி வெளியேற்றினார் கலெக்டர் ஜெயந்தி.

அதற்கு மேல் பேச முடியாததால், அப்பப்பா... வெலியில் ரெம்ப ஓவரா இருக்கே.. கொஞ்சம் மரத்தடியில போயி நாம நின்னுக்கலாம்.. என்னா... எனறு தங்களுககுல் கூறிக் கொண்டபடி படு டீசன்ட்டாக இரண்டு பேரும் இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார்கள்.

ஹார்ட் பிராப்ளம் இருக்கிறப்ப இப்படி ஹாட் வெயில்ல எதுககு அலஞ்சிக்கிட்டு.. பேசாம வீட்டோட இருந்த ரெஸ்ட் எடுத்திருக்கலாமே....

English summary
Karur collector Jayanthi showed the door to the Municipal chairman decently during the nomination of ADMK candidate Thambidhurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X