எடப்பாடி வீட்டு முன்பு போராட்டம் நடத்த தயார்.. தமிழர்களுக்கு கட்ஜு சாட்டையடி!
எடப்பாடி பழனிச்சாமி வீட்டு முன்பு போராட்டம் நடத்த நான் தயார் என்று கட்ஜு அறிவித்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி வீட்டு முன்பு போராட்டம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். உணர்ச்சியுள்ள தமிழன் ஒருவனாவது தமிழகத்தில் இருக்கிறானே என்று காட்டுவதற்காக இந்தப் போராட்டத்தை நடத்த நான் தயார் என்றும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
தமிழக அரசியல் விவகாரத்தில் தமிழக மக்களைப் போலவே கட்ஜுவும் கடும் கொதிப்புடன் உள்ளார். தமிழக மக்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசை பொறுத்துக் கொண்டிருப்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. நீங்கள் எல்லாம் தமிழர்கள்தானா என்றும் அவர் கோபமாக கேட்டுள்ளார்.
என்னை தமிழன் என்று பெருமையுடன் கூறி வந்தேன். இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு அப்படிச் சொல்வேன் என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உணர்ச்சியுள்ள தமிழனாக நான் போராடத் தயார் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் கட்ஜு. இதுகுறித்து அவர் தனது முகநூலில் போட்டுள்ள பதிவு:

பயப்படுகிறார்கள்
பேஸ்புக்கில் வரும் கருத்துக்கள், டிவீட்டுகளை வைத்துப் பார்க்கும்போது தற்போதைய தமிழக பினாமி ஆட்சி குறித்து மக்களுக்குப் பயம் உள்ளதாக நான் கருதுகிறேன். தமிழக ஆட்சியை பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி நடத்துகிறார்.

பயப்படாத தமிழன் நான்
நல்லது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத ஒரு தமிழன் இருக்கிறான். அது நான்தான். என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. நான் வெளிநாட்டிலிருந்து மே மாதம் நாடு திரும்புகிறேன். அதன் பின்னர் தமிழ்நாட்டுக்கு வருகிறேன்.

கொடி பிடித்துப் போராடத் தயார்
நேராக பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு அல்லது அலுவலகம் சென்று அங்கு சிறைப்பறவையால் நடத்தப்படும் இந்த பினாமி ஆட்சி ஒழிக என்று எழுதப்பட்ட பேனருடன் போராட்டம் நடத்துவேன்.

இரண்டில் ஒன்று பார்ப்போம்
ஒன்று என்னை அவர்கள் கைது செய்ய வேண்டும். அல்லது பதவியை விட்டு எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும். இரண்டில் ஒன்று நடக்கும் வரை போராட்டம் நடத்த நான் தயார்.

ஒருத்தனாவது இருக்கானே
தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்க ஒரு தமிழானவது இருக்கிறானே என்று காட்ட இந்தப் போராட்டத்தில் ஈடுபட நான் தயார் என்று கட்ஜு அதிரடியாக கூறியுள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications