24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் கருணாநிதி.. காவிரி மருத்துவமனை அறிக்கை!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று, அவருக்கு சிகிச்சையளிக்கும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று மாலை காவிரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு சிறு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அது வயோதிகம் காரணமானது. சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றால் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆன்டிபயோடிக்ஸ் மற்றும் திரவ மருந்துகள் செலுத்தபபடுகின்றன.

கருணாநிதி 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகளின் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கருணாநிதியின் வீட்டிலேயே மருத்துவமனையில் உள்ள அளவுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு, யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு காவிரி மருத்துவமனை செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!