கருணாநிதி டிஸ்சார்ஜ் எப்போது?... இன்று காவேரி மருத்துவமனை அறிவிக்கலாம்
சக்கர நாற்காலியில் கருணாநிதி நேற்று அமர்ந்திருந்ததால் அவர் குறித்து இன்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: படுக்கையில் இருந்து தசக்கர நாற்காலியில் கருணாநிதி நேற்று அமர்ந்திருந்ததால் அவர் குறித்து இன்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என தகவல்கள் கூறுகின்றன.
கருணாநிதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது.
அதில் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்றும் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பின்னடைவு
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.

பின்னடைவு உண்qமைதான்
பின்னர் அன்றிரவு ஒரு அறிக்கை வெளியானது. அதில் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அதிலிருந்து அவர் தேறியுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியானது.

தொண்டர்கள் உற்சாகம்
இதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கருணாநிதியை சந்திக்க ராகுல் காந்தி வந்திருந்தார். அப்போது கருணாநிதியிடம் ராகுல் வருகை குறித்து ஸ்டாலின் கூறிய போது கருணாநிதி தனது கண்களை திறந்து பார்த்தார். இந்த புகைப்படம் வெளியானதை அடுத்து தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

தொண்டர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் அவர் படுத்து கொண்டே இருப்பதால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் பாயும் விதத்தில் சிகிச்சையின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் சக்கர நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். இந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஏற்கெனவே கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும் கவலையின்றி தொண்டர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்லுமாறு கனிமொழி அறிவுறுத்தியிருந்தார்.

அறிக்கை
இந்த நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தை பார்த்த தொண்டர்கள் ஆரவாரத்துடன் உள்ளனர். இதனிடையே கருணாநிதியின் உடல்நிலை வேகமாக முன்னேறி வருவதாலும் அவர் சக்கர நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டதாலும் இன்றிரவு மருத்துவமனை சார்பில் ஏதேனும் அறிக்கை வெளியாகலாம் என தெரிகிறது.

கருணாநிதி டிஸ்சார்ஜ்
அந்த அறிக்கையில் கருணாநிதி எப்போதும் வீட்டுக்கு திரும்புவார் என்பது குறித்தாக இருக்கலாம். இல்லாவிட்டால் கருணாநிதி இன்னும் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்பது குறித்தும் இருக்கலாம் என தெரிகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications