மேஜை, நாற்காலி, கம்ப்யூட்டர்.. காரைக்குடிப் பள்ளியை அலங்கரித்த கல்விச் சீர்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்தார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா வளைகுடாப்பகுதி, தமிழ் மன்றச்செயலாளர் வெங்கடேஷ்குமார் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகாய அமலன், பள்ளி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குழுத் தலைவர் சகாய செல்வன் மற்றும் பள்ளி வளர்ச்சிக்குழுத் தலைவர் அழகு சுந்தரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும் பெற்றோர்கள் சார்பில் மாரியப்பன், பழனியப்பன், எஸ்.பாண்டித் துரை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கல்விச்சீர் வரிசையாக மேஜைகள், மடிக்கணினி, கணினி மேஜைகள் மற்றும் நாற்காலிகள் உள்பட ரூ. 1,30,645 ( ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரத்து அறநூற்று நாற்பத்து ஐந்து) மதிப்புள்ள தளவாடப் பொருட்கள் பெற்றோர்கள் வழங்க மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் பெற்று கொண்டார்.

அவர் தனது சிறப்புரையில் பெற்றோர்கள் பள்ளி வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது பாராட்டுக்குரியது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு முயற்சியே, மாணவர்களின் கல்வித் திறன் மேம்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

விழாவின் இறுதியில்பட்டதாரி ஆசிரியர் சித்ரா அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications