தனது ஆணுறுப்பை தானே துண்டித்துக்கொண்டதாக கேரள சாமியார் வாக்குமூலம்!

சட்டக்கல்லூரி மாணவியால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாமியார் தானே துண்டித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பலாத்காரம் செய்த சாமியாரின் ஆணுறுப்பை துண்டித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தானே துண்டித்துக்கொண்டதாக பாதிக்கப்பட்ட சாமியார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சாமியார் வீட்டில் உள்ள சூனியத்தை எடுப்பதாக பெண் ஒருவருடன் கள்ளஉறவு கொண்டார். பின்னர் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவரது மகளையும் பலாத்காரம் செய்யத் தொடங்கினார்.

Kerala godman tells to Police that he itself chopped off the his genitals

இந்நிலையில் தற்போது சட்டக்கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவி 8 ஆண்டுகளாக தன்னை பலாத்காரம் செய்து வரும் அந்த சாமியாரின் ஆணுறுப்பை கடந்த வெள்ளிக்கிழமை துண்டித்தார். அந்த பெண்ணின் துணிச்சலையும் தீரச்செயலலையும் பாராட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது ஆணுறுப்பை தானே வெட்டிக்கொண்டதாக பாதிக்கப்பட்ட சாமியார் தெரிவித்துள்ளார். சாமியாரின் இந்த வாக்குமூலம் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பெயரை காப்பாற்றிக் கொள்ள இவ்வாறு கூறுகிறாரா அல்லது உண்மையில் என்ன நடந்தது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+