பெண் சப்-கலெக்டரை காதலித்து திருமணம் செய்த கேரள எம்.எல்.ஏ !

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதன் - சப்- கலெக்டர் திவ்யா எஸ். அய்யர் திருமணம் தக்கலை அடுத்த குமாரகோவிலில் இன்று காலை நடந்தது.

கேரள மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கே.எஸ்.சபரிநாதன். அருவிக்கரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கும், திருவனந்தபுரம் சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

kerala mla married Ias officer on today

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். திருமணத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திருமணத்தை குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த குமாரகோவிலில் உள்ள முருகன் கோவிலில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சபரிநாதன் எம்.எல்.ஏ.- சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யர் திருமணம் திருமணம் இன்று காலை குமாரகோவில் முருகன் கோவிலில் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இவர்களை தவிர கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் கண்ணாட்டு விளை பாலையா, தக்கலை வட்டார தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஹனு குமார் உள்பட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அரசியல்வாதியும், அதிகாரியும் திருமணம் செய்துகொண்டுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress MLA from Aruvikkara in Kerala to married Thiruvananthapuram sub-collector Divya S Iyer on today
Please Wait while comments are loading...