கிளாம்பாக்கத்தில் மாறுதல்! பெருங்களத்தூர் டூ காட்டாங்குளத்தூரில் தமிழக அரசு செம! வேலை ஆரம்பிச்சாச்சு
செங்கல்பட்டு: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள போவதாக நம்பிக்கை தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஒருகட்டத்தில் போதுமான பஸ்களும் இல்லை என்றுகூறி நள்ளிரவிலேயே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போராட்டத்தையும் பயணிகள் செய்தார்கள்.

இதையடுத்து தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, சில துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டுவந்திருந்தது.
ரயில்வே துறை: எனினும், கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு முழுமையான தீர்வு காண முடியவில்லை. கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே துறைக்கு ஏற்கனவே ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையமும் அமைய போகிறது.. கே.சி.பி.டி. மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது..
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான வழிகளை கண்டறிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாளில் அறிக்கை அளிக்க அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டின் முன்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலேயே நடைபெற்றது.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. இதை சரி செய்ய வேண்டுமென அனைத்து துறை அதிகாரிகளுடன் இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சாத்திய கூறுகள்: போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக தற்போது குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் தரும் அறிக்கையை வைத்து அதற்கு ஏற்றவாறு பணிகளை செய்ய தயாராக உள்ளோம். குழுவினரிடமிருந்து 10 நாட்களுக்குள் அறிக்கை வாங்கப்பட்டு, அந்த அறிக்கையின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை, வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. பெருங்களத்துாரில் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கே, ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என, மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
நெரிசல்: அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை போக்கும் விதமாக, அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு, போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதை எவ்வாறு தீர்ப்பது, மாற்று வழி என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்கும்.
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். வண்டலூர் முதல் காட்டாங்குளத்தூர் வரை மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்பான அறிவிப்பு நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியாகும். அதேபோன்று சாலை விரிவாக்கப் பணியின்போது அகற்றப்பட்ட பஸ் நிறுத்தங்களை எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications