கல்வியாளர், பெரும் பணக்காரர், கவிதைக்காரர்.. அவர்தான் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கல்வியாளரும், பெரும் பணக்காரருமான ஜெகத்ரட்சகன் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் வேலைகளில் திமுக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனை பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.

கலிங்கமலைக்காரர்
ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன்(64) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தற்போது அடையாறு, கஸ்தூரிபா நகர், முதல் மெயின் ரோட்டில் வசித்து வருகிறார்.

அதிமுக
கெஜத்ரட்சகன் 1980ம் ஆண்டு உத்தரிமேரூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1984ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் களம் இறங்கி வெற்றி கண்டார். அதன் பிறகு 1989ம் ஆண்டு உத்திமேரூரில் ஜானகி அணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

திமுக
கெஜத்ரட்சகன் 1999ல் திமுக சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2009ம் ஆண்டில் மீண்டும் அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மத்திய தகவல் மற்றும் விளம்பர துறை, எரிசக்தி துறை, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

கல்வியாளர்
பாரத் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை ஜெகத்ரட்சகன் நடத்தி வருகிறார். அவருக்கு அனுசுயா என்ற மனைவியும், லட்சுமி நாராயணா என்ற மகனும், ஸ்ரீநிஷா என்ற மகளும் உள்ளனர்.

ஆகஸ்ட் 15
ஜெகத்ரட்சகன் எம்.ஏ. படித்த கல்வியாளர் ஆவார். அவர் நம் நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications