கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!
தமிழ்நாட்டில் புதிய கார்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் 'எம்-பரிவாகன்' (mParivahan) தளம் வெளியிட்டுள்ள 2025-26 நிதியாண்டுக்கான அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஒரே ஆண்டில் 2.99 லட்சத்திற்கும் அதிகமான புதிய கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கமர்சியல் வாகனங்கள் அதாவது டாக்சி கார்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
தலைநகர் சென்னை எப்போதுமே விற்பனையில் முதலிடத்தில் இருந்தாலும், அதற்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது கொங்கு மண்டலம். தொழில் வளம், விவசாயம், ஏற்றுமதி எனப் பன்முகத்தன்மையுடன் விளங்கும் மேற்குத் தமிழகம், கார் விற்பனையிலும் புதிய சாதனை படைத்து 'சென்னைக்கு அடுத்தபடியாக நாங்க தான் கெத்து!' என்று காட்டியுள்ளது.

அசைக்க முடியாத இடத்தில் சென்னை
தமிழகத்தின் ஒட்டுமொத்த கார் விற்பனையில் சென்னை மாநகரப் பகுதி (CMA) முழுவதும் சுமார் 1,02,733 புதிய கார் பதிவுகளுடன் 34.35 சதவீதம் பங்கைக் கொண்டு முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து உள்ளது. சென்னை நகர்ப்புறப் பகுதி மட்டும் தனியாக பார்த்தார் 32.61 சதவீதப் பங்களிப்புடன் 97,517 கார்கள் விற்கப்பட்டு உள்ளது.
கெத்து காட்டும் கோவை!
சென்னைக்கு அடுத்தபடியாக, மாநிலத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார மையமாகத் விளங்கும் கோயம்புத்தூர் நகர்ப்புறப் பகுதியில் (Coimbatore Urban Area) மட்டும் தனியாக 29,757 புதிய கார்களைப் பதிவு செய்யப்பட்டு, ஒட்டுமொத்த மாநில அளவில் 9.95 சதவீதம் பங்கைப் பெற்று அசத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தின் பிற முக்கியப் பகுதிகளான பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த கோவை மாவட்டக் கணக்கைப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கை 33,234 ஆக உயர்ந்து, மாநிலத்தின் மொத்த விற்பனையில் 11.11 சதவீதம் பங்கைக் கைப்பற்றியுள்ளது.
கொங்கு மண்டலம்
கோவை மட்டுமன்றி, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பிற அண்டை மாவட்டங்களும் கார் விற்பனையில் பெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜவுளி மற்றும் விவசாயத்திற்குப் புகழ்பெற்ற ஈரோடு நகர்ப்புறப் பகுதி (Erode UA) கடந்த நிதியாண்டில் 9,044 புதிய கார்களைப் பதிவு செய்து 3.02 சதவீதம் பங்கைப் பெற்றுள்ளது. ஈரோடு மத்தியப் பகுதி, ஈரோடு மேற்கு, குமாரபாளையம், திருச்செங்கோடு, பெருந்துறை மற்றும் பவானி ஆகிய வட்டாரங்களில் நடுத்தர மக்களின் கார் வாங்கும் ஆர்வம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரமான திருப்பூர் நகர்ப்புறப் பகுதி (Tiruppur UA) 8,808 புதிய கார்களைப் பதிவு செய்து 2.95 சதவீதம் பங்களிப்பை வழங்கியுள்ளது. இதில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் முன்னிலை வகிக்கின்றன.
இரும்பு மற்றும் ஜவ்வரிசி உற்பத்திக்குக் பெயர்போன சேலம் நகர்ப்புறப் பகுதி (Salem UA) 7,665 கார் பதிவுகளுடன் 2.56 சதவீதம் பங்கைப் பெற்றுள்ளது. இதன் மூலம் கொங்கு மண்டலம் முழுவதிலும் கார் வாங்குபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிகிறது.
தென் தமிழகத்தின்: மதுரை - கன்னியாகுமரி
மறுபுறம், தென் தமிழகத்தின் நுழைவாயிலாகக் கருதப்படும் தூங்கா நகரமான மதுரை நகர்ப்புறப் பகுதி (Madurai UA) 11,535 புதிய கார் பதிவுகளுடன் (3.86 சதவீதம்) மாநில அளவில் ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.
மதுரையின் வடக்குப் பகுதி மட்டும் 5,420 கார் பதிவுகளுடன் மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், மத்திய தமிழகத்தின் முதன்மை நகரமான திருச்சிராப்பள்ளி நகர்ப்புறப் பகுதி (Trichy UA) ஸ்ரீரங்கம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளையும் சேர்த்து 6,582 புதிய கார்களைப் (2.20 சதவீதம்) பதிவு செய்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவில் ஆகிய இரு முக்கிய நகரங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரே ஆண்டில் 8,323 புதிய தனியார் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மாநில அளவில் 2.78 சதவீதம் பங்காகும்.
பொருளாதாரத்தின் கண்ணாடி
ஒரு பகுதியில் புதிய கார்களின் விற்பனை அதிகரிப்பது என்பது வெறும் ஆடம்பரத்தின் அடையாளம் மட்டுமல்ல. அது அந்தப் பகுதியில் வாழும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தரக் குடும்பங்களின் உண்மையான வாங்கும் சக்தி (Purchasing Power), எளிய முறையில் கிடைக்கும் வங்கிக் கடன் வசதிகள் (Credit Access) மற்றும் அதிவேகமாக விரிவடைந்து வரும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றின் முக்கிய அளவுகோலாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications