நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு- கோவையில் திரண்ட மாணவர்கள் கைது
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவை வஉசி மைதானத்தில் போராடிய மாணவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
கோவை: நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாய்களை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் போராடிய மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் அந்த திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

101 வது நாளாக நெடுவாசலில் கிராம மக்கள் போராடி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறும் வரை ஓயமாட்டோம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுவாசல் கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவை வஉசி மைதானத்தில் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் தங்களின் பணிகளை நிறுத்த வேண்டும், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வஉசி மைதானத்தையே மாணவர்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அதேபோல நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவும் மாணவர்கள் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் திரண்டதை அறிந்த போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர். வெளியேற மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications