நிறுத்திக்கனும், நடராஜனும், தம்பிதுரையும் கட்சியை அழிக்கப் பார்க்கிறார்கள்.. கே.பி.முனுசாமி ஆவேசம்
கிருஷ்ணகிரி: நடராஜனும் தம்பிதுறையும் கட்சியை சீரழிக்கப் பார்க்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக எங்கள் கட்சி என கூறுவதை நடராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார்குடி கும்பலுக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அண்மையில் தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய திவாகரன், அதிமுகவை காப்பாற்றியதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக கூறினார்.
அதிமுகவை தாங்கள் தான் காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய நடராஜன் குடும்ப அரசியல் செய்வோம் என பகிரங்கமாக கூறினார். நடராஜனின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திவாகரன் மற்றும் நடராஜனின் பேச்சுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது,

நடராஜன் செய்த துரோகம்
"நடராஜன் அதிமுகவுக்கு செய்த துரோகத்தால் தான் ஜெயலலிதா அவரை கட்சியில் இருந்து நீக்கினார் என்று தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அவர் இறந்த பிறகு கட்சிக்குள் வந்து நான் தான் அதிமுகவை காப்பாற்றினேன் என்று கூறுகிறார்.

சசிகலாவை முதன்முதலாக சந்தித்தேன்
என்னை நக்சலைட் என்றும், தனது காலில் விழுந்ததால்தான் எம்.ஜி.ஆர் மன்ற பதவி கொடுத்ததாகவும் நடராஜன் சொல்லியிருக்கிறார். ஆனால் கல்லூரியில் படிக்கும்போதே நேரடியாக எம்.ஜி.ஆர். மூலம் நான் கட்சிக்கு வந்தேன். 2011ல் என்னை அமைச்சராக அறிவித்த பின்னர்தான் சசிகலாவை முதன்முதலாக சந்தித்து பேசினேன்.

தீய சக்தி நடராஜனை வேளியேற்றுங்கள்
நான் எப்போதும் பொதுச்செயலாளர்களிடம்தான் பேசுவேன். அதேபோல்தான் தற்போது நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். தீய சக்தி நடராஜனை வேளியேற்றுங்கள்'' என்று அவர் அதிமுக பொதுச்செயலாளருக்கு கோரிக்கை விடுத்தார்.

கட்சியை சீரழிக்கப்பார்க்கிறார்கள்
மேலும் நடராஜனும் தம்பிதுறையும் கட்சியை சீரழிக்கப் பார்க்கிறார்கள். அதிமுக எங்கள் கட்சி என கூறுவதை நடராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்
அதிமுக எங்கள் கட்சி என்று கூறுவதை நடராஜன் நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்
அதிமுக நாங்கள் வளர்த்த கட்சி என நடராஜன் கூறுவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே திவாகரனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த கே.பி.முனுசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,
அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ்.மணியன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications