கிருஷ்ணகிரி துணை வட்டாட்சியர் சாலை விபத்தில் அநியாய பலி! - வீடியோ
கிருஷ்ணகிரி பேச்சம்பள்ளி துணை வட்டாட்சியர் பணி முடித்து வீடு திரும்புகையில் சாலை விபத்தில் அநியாயமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பேச்சம்பள்ளி துணை வட்டாட்சியர் பணி முடிந்து வீடு திரும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி பேச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவர் சரவணன். இவர் நேற்று விடுமுறை தினம் என்றபோதிலும் சில பணிகளை அலுவலகத்துச் சென்று முடித்துவிட்டு வீட்டுக்கு தன் இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரதவிதமாக அவருடைய இருசக்கர வாகனம் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி அவர் உடல் மீது ஏறிச் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சூலகிரி போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைகு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தற்செயலாக ஏற்பட்ட விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சாலை விபத்துகளில் உயிர் இழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications