கனிமொழிக்கு சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா வாழ்த்து
2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழிக்கு சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: 2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழிக்கு சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

சுமார் 6 ஆண்டுகள் விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்காததால் 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கனிமொழிக்கு திமுக, காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சசிகலா உறவினர் கிருஷ்ணப்பிரியாவும் கனிமொழிக்கு வாழ்த்துகளை தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ஒரு பெண்ணாக , ஒரு தாயாக, கனிமொழி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணமடைந்தவுடன் ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் சிரித்தார் என்றும் எங்கள் முதல் எதிரி திமுகதான் என்றும் சசிகலா கூறியிருந்த நிலையில் அவரது உறவினர் கிருஷ்ணப்பிரியா இதுபோல் வாழ்த்து செய்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுபோல் டிடிவி தினகரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications