டாக்டர் கிருஷ்ணசாமி எம்.பியா? எம்.எல்.ஏவாக தொடர்வாரா?
தூத்துக்குடி: தென்காசி லோக்சபா தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, எம்.பியாக வெற்றி பெறுவாரா? ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏவாகவே நீடிப்பாரா என்பதற்கான விடை மே 16ல் தெரியவரும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தனித்தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ., வாக இருப்பவர் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இவர் கடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து இந்த சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றார்.
தற்போது தி.மு.க., கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது . இந்த கட்சிக்கு லோக்சபா தேர்தலில் தென்காசி தனித்தொகுதியினை தி.மு.க., வழங்கியுள்ளது. இந்த தொகுதியில் தற்போதைய ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தலில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில், தனது ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் ஒரே நேரத்தில் இரு பதவிகளில் நீடிக்க முடியாது. அப்படி ராஜினாமா செய்தால், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் கிருஷ்ணசாமி தென்காசி லோக்சபா தொகுதியில் தோல்வியடைந்தால், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., வாக பணியாற்ற முடியும். அப்போது ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வராது.
ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தலை நிர்ணயிக்கும் நிலையில், தென்காசி லோக்சபா தேர்தல் அமைந்துள்ளது. ஓட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தலா..? இல்லையா..? என்பது மே 16ல் தெரியவரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications