கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு: குமரியில் விஞ்ஞானிகள் ரகசிய ஆலோசனை

கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள முதலாவது அணுஉலையில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது.
படிப்படியாக மின் உற்பத்தியை அதிகரித்து தற்போது 410 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதலாவது அணுஉலையில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க மட்டுமே தற்போது இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அந்த அணு உலை மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் போது, அதற்கு தகுந்த பாதுகாப்பு உள்ளதா? என்று சர்வதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகளும் நேரில் பார்த்து ஆய்வு செய்வது வழக்கம். இதற்கான ஆய்வு கூட்டத்தை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமையன்று கன்னியாகுமரியில் கூட்டியது.
முன்னதாக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைமை விஞ்ஞானி பஜாஜ் நேற்று கூடங்குளம் சென்று அங்குள்ள ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் இந்திய விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் குமரியில் நடந்த சர்வதேச அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய விஞ்ஞானிகளுடன், கூடங்குளம் அணுசக்தி நிலையத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு பாதுகாப்பு உள்ளது என்று விளக்கி கூறினார்.
இந்த ஆய்வு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகள் மைக்கல் நேரோவ் (ரஷ்யா) குரோமா (உக்ரைன்), சாகன்(குரோஷியா) உள்பட 15 விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்றது. அதன்பின் சர்வதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகள் குழுவினர் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார்கள். இவர்கள் ஆய்வில் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யப்பட்டு, சான்று அளித்தால் மட்டுமே இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கும்.
இதற்காக கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இன்று அணுமின் நிலையத்தில் தயார் நிலையில் உள்ளனர். அணுமின் நிலைய பகுதிகளிலும் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications