பசுமைவழி சாலை.. குள்ளம்பட்டி விவசாயிகள் ஆடு, மாடுகளுடன் கோயிலில் தஞ்சம்.. இறைவனிடம் முறையீடு!
குள்ளம்பட்டி விவசாயிகள் இறைவனிடம் முறையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம்: 8 வழிசாலை திட்டத்தினை கைவிட கோரி, சேலம் குள்ளம்பட்டி கிராம மக்கள், ஆடு, மாடுகளுடன் கோயிலில் தஞ்சம் அடைந்து இறைவனிடம் முறையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம்-சென்னை இடையே பசுமை வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் நிலம் கையகப்படுத்தும் பணியினை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதனால் விளைநிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகளை என வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுவது 5 மாவட்ட மக்களையும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த 3 தினங்களுக்கு முன்புகூட, சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி மக்கள் தங்கள் கிராமத்திலேயே உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு கருப்பு பட்டையுடன் சென்றனர். நடைபெற்று வரும் பசுமை வழிசாலை பணிகளை தடுத்து நிறுத்தக்கோரி அம்மனிடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், இன்று மீண்டும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்காக ஆடு மாடுகளுடன் கோயிலில் தஞ்சம் அடைந்து இறைவனிடம் முறையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 8 வழி சாலை திட்டத்தினை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications