திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து... ஹைகோர்ட் அதிரடி
திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
Recommended Video

சென்னை: திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார். மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கடந்த மே 23-இல் கைது செய்யப்பட்டனர்.

குண்டர் சட்டம்
அவர்கள் 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

வாபஸ் இல்லை
எனினும் அந்த 4 பேர் மீதான குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில் ஜாமீன் கோரிய இவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யும்படி திருமுருகன் உள்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஓரிரு நாளில் விடுதலை
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து அவர்கள் நால்வரும் வெளியே வர ஓரிரு நாள்கள் ஆகும் என தெரிகிறது.

வளர்மதி
இதேபோல் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகித்த சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தந்தை மாதையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் வளர்மதி மீதான குண்டாஸை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அரசுக்கு அதிரடி
திருமுருகன் காந்தி, வளர்மதி உள்பட 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் சட்டசபையில் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீதான குண்டாஸை நியாயப்படுத்தியே பேசினார். இந்நிலையில் எடப்பாடி அரசின் பிடிவாதத்தை மீறி சென்னை உயர்நீதிமன்றம் அவர்களை விடுவித்து அதிரடி காட்டியுள்ளது.

எதையும் எதிர்கொள்வோம்
சிறையில் இருந்து விடுதலையான திருமுருகன் காந்தி, மிகவும் ஆவேசமாக பேசினார். திகார் சிறையோ... புழல் சிறையோ எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்று கூறினார். 4 மாதங்களோ, 4 வருடங்களோ, 40 ஆண்டுகளே எங்களை சிறையில் தள்ளினாலும் நாங்கள் எதிர்கொள்வோம். அந்தமான் சிறையில் தள்ளினாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம் என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications