திருநாவுக்கரசருக்கு, குஷ்பு பாடம் எடுக்கலாம்.. சிண்டு முடியும் பொன்.ராதாகிருஷ்ணன்

சிவில் சட்டம் பற்றி தெரியாத காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு, அக்கட்சி பிரமுகர் குஷ்பு பாடம் எடுக்கலாம் என கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பொது சிவில் சட்டம் பற்றி திருநாவுக்கரசருக்கு குஷ்பு பாடம் நடத்தலாம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த, சுசீந்திரத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் உரிய நேரத்தில் அமையும் எனவும், ஊழல் போன்ற விஷயங்களில் புகழ் மங்கி இருக்கும் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும், இந்து இயக்க தலைவர்கள் கொல்லப்படுவதும், தாக்கபடுவதும் , அவர்களின் உடைமைகள் சூறையாட படுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. இதை பற்றி பேசுவதற்கு தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி தலைவர்களுக்கு லாயக்கு இல்லை. இவர்களின் லட்சணத்தை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Kusboo can teach a lesson to Tirunavukkarasu on Civil law, says Pon Radhakrishnan

மக்கள் நல கூட்டணி ஒரு கூட்டணியே இல்லை எனவும், ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழர்களுக்கு துரோகம் செய்கின்ற காங்கிரஸ் கட்சிக்கு தொல். திருமாவளவன் பாண்டிசேரியில் ஆதரவு தெரிப்பதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை எனவும், தீவிரவாதிகள் கொல்லபட்ட விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். க்கு தொடர்பு உள்ளது என பொய்யான வாக்குறுதி அளித்து ஆர். எஸ்.எஸ்., அமைப்பை கேவலபடுத்தும் கிழ் தரமான பணியில் காங்கிரஸ் கட்சி இறங்கி உள்ளது எனவும், பொது சிவில் சட்டம் குறித்து குஷ்பூ அவர்கள் திருநாவுக்கரசு அவர்களுக்கு பாடம் நடத்தினால் தெளிவு பெறுவார் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிவில் சட்டத்திற்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய நிலையில், அதை காங்கிரஸ் தமிழக பிரிவு தலைவர் திருநாவுக்கரசர் மறுத்தது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+