கணவர் கொலைக்கு சக்களத்தியை பழித் தீர்க்க ரூம் போட்டு சதி... பெண் தாதா உள்பட 14 பேர் கைது
புதுவையில் கணவரை கொன்றவர்களை பழி வாங்க சதி திட்டம் தீட்டிய பெண் தாதா எழிலரசி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

புதுவை: புதுவையில் கணவரை கொன்றவர்களை பழி வாங்க ஹோட்டலில் ரூம் போட்டு சதி திட்டம் தீட்டிய புதுவை பெண் தாதா எழிலரசி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்காலை அடுத்த திருபட்டினத்தைச் சேர்ந்தவர் ராமு. சாராய வியாபாரியாக இருந்தார். பின்னர் இவர் கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எழிலரசி என்பவரை 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வினோதா ராமுவையும் எழிலரசியையும் கொல்ல திட்டமிட்டார். கடந்த 2013-ஆம் ஆண்டு காரைக்காலில் பைக்கில் சென்றபோது ராமுவையும், எழிலரசியையும் கூலிப்படை வைத்து கொல்ல திட்டமிட்டார். அதன்படி கூலிப்படையினர் வெட்டியதில் ராமு இறந்துவிட்டார். ஆனால் எழிலரசி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.

சபதம் எடுத்த எழிலரசி
கணவரை கொலை செய்தவர்களை பழி வாங்க திட்டமிட்டார் எழிலரசி. இதை அறிந்த வினோதா தனது உயிருக்கு ஆபத்து என்பதால் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு காரைக்காலில் இருந்து சென்னைக்கு வினோதா காரில் சென்றபோது சீர்காழி அருகே வழிமறிக்கப்பட்டு வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக எழிலரசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் கொலை
ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி பெண் தாதாவாக உருவெடுத்தார். கணவரின் கொலையில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாரையும் கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது திருமண மண்டபத்தை பார்வையிட வந்த வி.எம்.சி.சிவக்குமாரை காரில் வந்த ஒரு கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொன்றது.

10 மாதம் சிறை தண்டனை
இதையடுத்து எழிலரசி மீண்டும் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் 10 மாதம் அடைக்கப்பட்டார். மீண்டும் நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். முன்னாள் அமைச்சரை கொன்றதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனபதால் அடிக்கடி இடத்தை மாற்றி கொண்டே இருந்தார். புதுவையில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த எழிலரசி யாரையோ கொல்ல சதி திட்டம் தீட்டுவதாக போலீஸாருக்கு தெரிந்தது.

மீண்டும் சிறை
சம்பவ இடம் விரைந்த போலீஸார் எழிலரசியையும் அவருடன் இருந்த 13 ரவுடிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராமுவின் முதல் மனைவி வினோதாவின் தங்கை கணவர் ஆனந்தை கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது.

முதல் மனைவியின் உறவினர்
கைதானவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள்கள், கத்திகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அனைவரும் காலாப்பட்டு சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். இவர்கள் தவிர மேலும் பலர் இந்த சதி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களையும் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications