கணவருக்கு மனநல பாதிப்பு: மனமுடைந்த மனைவி மகளைக் கொன்று தானும் தற்கொலை
கன்னியாகுமரி: கன்யாகுமரி அருகே, கணவரின் மனநிலை பாதிப்பால் மனமுடைந்த மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கொற்றியோடு, நெக்கட்டான் பாறை பகுதியை சேர்ந்த விவசாயி பிரசாத் (வயது 40). இவரது மனைவி ராதா (35). இவர்களுக்கு கணேசன் (17) என்ற மகனும், பவித்திரா (16) என்ற மகளும் இருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு உண்டானதிற்குப் பிறகு, பிரசாத்திற்கு திடீரென மனநல பாதிப்பு உண்டானதாம். கணாவருக்கு சிகிச்சைகள் அளிக்கப் பட்டும் பலனில்லாமல் போகவே ராதா மன முடைந்து காணப்பட்டுள்ளார்.
வாழை பயிரிட்டு விவசாயம் பார்த்து வந்த பிரசாத், மனநிலை பாதிப்பால் எப்போதும் தனியாகவே வீட்டில் புலம்பிக்கொண்டே இருந்து வந்துள்ளார். இது மென்மேலும் ராதாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த, மனமுடைந்த ராதா தனது மகள் பவித்ராவுக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு வீட்டிற்கு வந்த கணேசன் சமையலறையில் தாயும், தங்கையும் வாயில் நுரை தள்ளியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தாய், மகள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப் பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications