இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று கிணற்றில் வீசிய மர்ம நபர்கள்!
வேலூர்: வேலூரில் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், அவரைக் கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்ற மர்மநபர்களால் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் ஊசி தோப்பைச் சேர்ந்தவர் கந்தசாமி.
இவருக்கு சொந்தமாக காளி வட்டத்தில் விவசாய நிலம் உள்ளது.
பெரிய துணி மூட்டை:
நேற்று மாலை 6. 30 மணிக்கு டாட்டா சுமோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் துணியில் சுற்றப்பட்ட பெரிய அளவுள்ள ஒரு பார்சலை கந்தசாமியின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வீசி விட்டு வேகமாகச் சென்றுள்ளனர்.
கிராம மக்கள் மீது தாக்குதல்:
பார்சல் விழுந்த சத்ததைத் கேட்டு சந்தேகப்பட்ட அக்கிராம மக்கள் பார்சலை வீசி சென்றவர்களின் காரை துரத்திச் சென்றனர். காரில் இருந்தவர்கள் கிராம மக்கள் மீது காரை ஏற்ற முயன்றனர்.
பத்து பேர் படுகாயம்:
இதில் அப்பகுதியில் இருந்த வயல் வரப்புக்களில் விழுந்து பத்து பேர் காயமடைந்தனர். தொடர்ந்து காரை துரத்தி வந்த கிராம மக்கள் மீது காரில் இருந்தவர்கள் கத்தி, அரிவாளை வீசி விட்டுச் சென்றனர்.
பெண்ணின் உடல்:
தகவல் கேட்டு விரைந்து வந்த வாணியம்பாடி போலீசார் மற்றும் தீயணைக்கும் படையினர் கந்தசாமியின் விவசாய கிணற்றில் இறங்கி கிணற்றில் வீசி செல்லப்பட்ட பார்சலை மீட்டனர்.
பாலியல் வன்முறை:
அதில் 30 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் பாலியல் பலத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சியில் போலீசார்:
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இளம் பெண்ணின் சடலத்தை கிணற்றில் வீசி சென்ற மர்ம கும்பலைப் பிடிக்க நான்கு பிரிவுகளாகச் சென்றுள்ளனர்.
செக் போஸ்ட் கேமராவில் பதிவு:
அந்த மர்ம கும்பல் சென்ற டாட்டா சுமோ நாட்றம்பள்ளி செக் போஸ்ட் வழியாகச் சென்றது அங்குள்ள காமிராவில் பதிவாகியுள்ளது தெரிந்தது.
பெங்களூரில் தேடுதல் வேட்டை:
மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் நாட்றம்பள்ளி வழியாக பெங்களூருக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என சந்தேகப்பட்ட மற்றொரு தனிப்படையினர் அவர்களை தேடி பெங்களூர் விரைந்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications