லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை? புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன்
சென்னை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் சென்னையில் லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகள் ராதிகா போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் மனைவியை விட்டு பிரிந்து மைத்துனியுடன் குடும்பம் நடத்துகிறார்; மகள்களிடம் தவறாக நடக்கிறார் என்ற புகார்களுடன் அண்மையில் ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்த போது இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் நாகப்பன் கெஞ்சினாராம். ஆனால் அவர் எதிர்ப்பையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது நாகப்பனின் மகள் ராதிகா புகார் கொடுத்துள்ளார்.
இதை மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், புகார் தந்த ராதிகா நிகழ்ச்சி முடிந்ததும் என்னுடன் செல்பி எடுத்தார். நாகப்பனின் மனைவி அம்பிகா தான் நாகப்பனை அதிகமாக திட்டினார். நாகப்பனின் மரணம் வருத்தம் அளித்தாலும் அவரால் 5 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுவதே என்னுடைய கடமை. நாகப்பன் மீது போலீசில் புகார் தெரிவிக்க மட்டுமே சொன்னோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications