Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலானி மீது புகார் கொடுக்க ஒரு நிமிஷம் ஆகாது.. ஆதாரம் எல்லாம் இருக்கும்.. ஆனால்.. லலித்தின் சகோதரர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நிலானி பற்றிய ஆதாரம் எல்லாம் இருக்கு- லலித்தின் சகோதரர்- வீடியோ

    சென்னை: நிலானி மீது புகார் கொடுக்க ஒரு நிமிஷம் இருக்காது. எல்லா ஆதாரமும் இருக்கிறது. ஆனால் அவரது குழந்தைகளின் முகத்துக்காக பார்க்கிறேன் என்று லலித்குமாரின் சகோதரர் தெரிவித்தார்.

    டிவி சீரியல்களில் நடித்து வருபவர் நிலானி. இவருக்கும் லலித்குமாருக்கும் இடையே 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிலானி தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறி லலித்குமார் கடந்த 16-ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதற்கு நிலானிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவரோ அதை மறுக்கிறார்.

    சைக்கோ

    சைக்கோ

    சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தான் தலைமறைவாக வில்லை என கூற நிலானி வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்திக்கையில் லலித்குமார் ஒரு சைக்கோ, ஆண்மையற்றவன்.

    தற்கொலை முயற்சி

    தற்கொலை முயற்சி

    மற்ற பெண்களுடன் லலித்துக்கு தொடர்பிருந்தது. என்னிடம் ஏராளமான பணத்தை ஏமாற்றி வாங்கியுள்ளார் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறினார். இந்நிலையில் நிலானியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஆதாரமற்ற குற்றச்சாட்டு

    ஆதாரமற்ற குற்றச்சாட்டு

    இதுகுறித்து லலித்குமாரின் அண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நிலானி எனது தம்பி உயிரோடு இல்லை என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதெல்லாம் உண்மையில்லை.

    தன்னையே மாய்த்து கொண்டான்

    தன்னையே மாய்த்து கொண்டான்

    என் தம்பியும் நல்லவன் இல்லை, அவரும் நல்லவர் இல்லை. என் தம்பியிடம் அந்த பெண்ணுடன் செல்ல வேண்டும் என எவ்வளவோ கூறிவிட்டோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இன்று அதன் பலனாக தன்னையே மாய்த்து கொண்டான்.

    பரிதாபமாகிவிடும்

    பரிதாபமாகிவிடும்

    நிலானி மீது புகார் தெரிவிக்க வேண்டும் என நினைத்தால் எங்களுக்கு ஒரு நிமிடம் ஆகாது. அனைத்து ஆதாரங்களும் எனது தம்பியின் செல்போனில் உள்ளது. ஆனால் அவரது குழந்தைகளின் முகத்துக்காக பார்க்கிறோம். நிலானிக்கு எந்த ஆதரவும் இல்லை. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டால், குழந்தைகளின் நிலை பரிதாபமாகிவிடும்.

    நிலானி

    நிலானி

    அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே பார்க்கிறேன். மேலும் என் தம்பியே போய்விட்டான். இனி அவர் மீது புகார் கொடுத்து என்னவாகிவிட போகிறது. அதற்காகதான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். அதற்காக நிலானி என் தம்பி மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஏற்க மாட்டோம்.

    அதிக செலவு

    அதிக செலவு

    என் தம்பி நிலானியின் வீட்டு வாடகையை செலுத்தியுள்ளார், குழந்தைகளின் பள்ளி கட்டணம், வீட்டு அத்தியாவசிய பொருட்கள் என வாங்கி போட்டுள்ளார். அது போல் நிலானியிடமிருந்து லலித் பணம் பெற்றுள்ளான் என்பதை நான் மறுக்கவில்லை. அவரிடம் இருந்து இவன் ரூ.5000 பெற்றால் அதைவிட அதிகமாகவே நிலானிக்கு செய்துவிடுவான். இருவரும் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+