நிலம் கையகப்படுத்துதல் மசோதா: கருணாநிதியின் கேள்விகளுக்கு ஜெயலலிதா காட்டம்
சென்னை: நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா விவகாரத்தில் அதிமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "பொய்யைச் சொன்னாலும், பொருத்தமா சொல்லுங்கடா; போக்கத்த பசங்களா" .தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நிலம் கையகப்படும் மசோதா நன்மை பயக்கும் என்பதால் அ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஆதரித்ததாம்.பாஜகவை ஆதரித்ததற்கான அடிப்படைக் காரணத்தை மறைக்க முடியாது என்று கூறியிருந்தார் கருணாநிதி.

அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதா, தனியார் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் நிலம் எதுவும் கையகப்படுத்தப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு பாதிப்பு
இதனால், தமிழகத்தில் விவசாயிகள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். நிலம் எடுப்பதில் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு சலுகைகள் அளிக்கப்படக்கூடாது என அதிமுக கொண்டுவந்த திருத்தத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுக்கு அதிகாரம்
2013ஆம் ஆண்டு முந்தைய மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தில், மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் அம்சங்கள் இருந்ததாலேயே அதனை அதிமுக எதிர்த்ததாக விளக்கமளித்துள்ள ஜெயலலிதா, தற்போது மாநில அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதற்காக எதிர்க்க வேண்டும் எனவும் வினா எழுப்பியுள்ளார்.
இரட்டை வேடமா?
விவசாயிகளின் நலன் பாதிக்காமல், அதுதொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுக்கு தற்போதைய மசோதாவில அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால், இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு இல்லை என ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருணாநிதிக்கு கவலையில்லை
மீத்தேன் எரிவாயு திட்டம், காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் விவசாயிகளின் நலன்பற்றி கருணாநிதி கவலைப்பட்டதில்லை என்றும் ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.
வெளியே வந்த பூனைக்குட்டி
இதனிடையே அதிமுகவின் நிலைப்பாடு பற்றி கருணாநிதி தனது அறிக்கையில், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்ட உண்மை உலகத்திற்கு நன்றாகவே புரியும்.அ.தி.மு.க. வஞ்சித்து விட்டது என்பதை தமிழக விவசாயிகள் புரிந்து கொண்டு விட்டார்கள். எனவே ஜெயலலிதா என் மீது கோபப்பட்டுப் பயனில்லை என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
சிறுபிள்ளைகளுக்கு தெரியும்
பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. இந்த மசோதாவை வலியச் சென்று ஆதரிக்கும் என்பது, தமிழ்நாட்டில் உள்ள சிறு பிள்ளைகளைக் கேட்டால் கூட தெரிந்த கதை தானே என்பார்கள்.
புண்ணுக்கு புணுகு
இதை சமாளிக்கவும், ஏற்பட்டு விட்ட ஆழமான புண்ணுக்குப் புணுகு தடவிடவும் ஜெயலலிதா இவ்வளவு பெரிய அறிக்கை விட்டு, "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பதைப் போல என்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை; வேஷம் கலைந்து விட்டது என்பது விவசாயிகளுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி மாறி நடத்தி வரும் அறிக்கை போர் எப்போது முடியுமோ தெரியலையே?.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications