For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடைக்கானலில் மிககனமழை.. 20 இடங்களில் நிலச்சரிவு.. போக்குவரத்து துண்டிப்பு.. மக்கள் அவதி

Google Oneindia Tamil News

கொடைக்கானல் : கொடைக்கானலிலிருந்து பெருமாள்மலை அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானல் நகருக்குள் செல்ல முடியாமல், விவசாயிகள், சுற்றுலாப்பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். ர்.

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கோடைவாசஸ் தலங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு தற்போது இரண்டு பிரதான வழிகளில் செல்ல முடியும். ஒன்று வத்தலக்குண்டு, காட்ரோடு வழியாக செல்லும் சாலை. இதுவே பிரதானமான சாலை. இதுதவிர பழனி வழியாகவும் கொடைக்கானல் வரலாம். ஆனால் அந்த சாலை கொஞ்சம் குறுகலானது.

வத்தலக்குண்டு வழியாக செல்லும் காட்ரோடு சாலையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பழனி சென்று போக வேண்டும். அது மிகமிக தூரம் என்பதுடன், ஒரே நேரத்தில் பல வாகனங்கள் சென்று வரும் அளவுக்கு பழனி சாலை பெரியதும் அல்ல.

 ரூ.8 கோடி மதிப்பு திமிங்கல உமிழ்நீர் கடத்தல்... நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட இருவர் கைது..! ரூ.8 கோடி மதிப்பு திமிங்கல உமிழ்நீர் கடத்தல்... நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட இருவர் கைது..!

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம்

அதனால் மாற்று சாலையாக தேனி மாவட்டம் பெரியகுளம், கும்பக்கரை அருவியையை ஒட்டி அடுக்கம் வழியாக பெருமாள் மலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டது. இந்த பாதை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அமைக்கப்பட்டு வருகிறது. சாலைப்பணி 90 சதவீதத்திற்கு மேல் முடிந்துவிட்டது. தேனி மாவட்டத்தில் இருந்து செல்லும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்த சாலை வழியாகவே செல்கின்றன.

ஆபத்தானது சாலை

ஆபத்தானது சாலை

ஆனால் கனரக வாகனங்கள், பெரிய வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கொடைக்கானலுக்கு செல்ல மாற்றுவழியான அடுக்கம் பெரியகுளம் சாலையில் பல்வேறு இடங்களில் ஆபத்தான நிலையில் சாலைகள் உள்ளன. மிகமிக உயரமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மேலும் சாலை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து ஒவ்வொறு ஆண்டும் மழைக்காலங்களில் பெரியளவிலான மண்சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது.

நிலச்சரிவு

நிலச்சரிவு


இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக பெரியகுளம் அடுக்கம் நெடுஞ்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சாலையில் மூடிக் கிப்பதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் சாலைகள் காணவில்லை. இதனால் கொடைக்கானல் நகருக்குள் செல்ல முடியாமல் மக்கள் துண்டிக்கப்பட்டுள்ளனர்.

அடுக்கம் அருகே அதிகம்

அடுக்கம் அருகே அதிகம்

அடுக்கம் செல்லும் வழியில் இரண்டு இடங்களிலும், அடுக்கத்தைத் தாண்டி 15க்கும் மேற்பட்ட இடங்களிலும் மண்சரிவும், சாலை பெயர்ந்தும் காணப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் இன்று காலை முதலே சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் அவதி

விவசாயிகள் அவதி

இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதனை சரிசெய்யும் வரை பயணிகள் விவசாயிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டும் மேலும் மிகவும் குறுகலான இச்சாலையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதும் பாறைகள் உருண்டு போக்குவரத்து தடைகள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதும் வழக்கமாகியுள்ளது அதிகமான பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

English summary
Landslide occurred at more than 20 places on the road from Kodaikanal to Periyakulam via Perumalmalai. Farmers and tourists in Kodaikanal have been severely affected as traffic has been cut off.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X