106 மீனவர்களை விடுதலை செய்த கையோடு 3 மீனவர்களை சிறை பிடித்த இலங்கை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதப்பட்டனத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். பொங்கல் சமயத்தின்போதும் கூட இலங்கை கடற்படை இவ்வாறு நடந்துள்ளது தமிழக மீனவர்களை வேதனைக்குள்ளாக்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்திய எல்லையான கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 3 மீனவர்களையும் சுற்றி வளைத்தனர்.

சுற்றி வளைத்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட 3 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் மாலைக்கு பிறகு நீதிமன்றத்தில் 3 மீனவர்களையும் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இலங்கை சிறையில் இருந்த 106 மீனவர்களை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களுக்கு முன்னர் இலங்கை விடுதலை செய்தது. இவர்கள் தாயகம் திரும்புவதற்கு முன்னதாகவே தற்போது 3 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications