சட்டக்கல்லூரி மாணவர் படுகொலை... 4 பேர் ராஜபாளையம் கோர்ட்டில் சரண்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோவில் கொடை விழாவின் போது சட்டக் கல்லூரி மாணவர் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் நீதிமன்றத்தில் 4 பேர் சரண் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(18). மதுரை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தனது சொந்த ஊருக்கு வந்திருந்த மணிகண்டன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கோவில் கொடை விழாவின் போது மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜாதிய ரீதியில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் என்று போலீஸார் கொலையாளிகளை தேடி வந்தனர். இது குறித்து படுகொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஜாதிய மோகம்
மணிகண்டன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவராம். ஆனால் அவர், வேறொரு ஜாதி மீது மிகுந்த அக்கறை கொண்டவனாக இருந்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் போது அவர் மற்றொரு குறிப்பிட்ட ஜாதி நண்பர்களிடம் பழகுவாராம். அந்த ஜாதிக்காரர்களுக்கு பரிந்து பேசுபவனாக எப்போதும் இருந்ததாக கூறப்படுகிறது.

வாட்ஸ்-அப் பிரச்சனை
வாட்ஸ்-அப் பிரச்சனை இந்த நிலையில், மணிகண்டனின் வாட்ஸ்-அப் நம்பருக்கு தான் பெரிதும் மதிக்கின்ற ஜாதியினரை இழிவுபடுத்தும் வகையில் ஒரு படம் வந்துள்ளது. படம் அனுப்பிய நபர் வேறொரு ஜாதியைச் சேர்ந்தவராம். இதற்கு மணிகண்டனும் பதிலுக்கு, ஜாதிய ரீதியில் படங்களை அனுப்பினாராம்.

நடிகர்களின் படம்
நடிகர்கள் படம் ஒரு கட்டத்தில் படத்தில் அஜீத்தின் தலை, இன்னொரு கையில் ரத்தம் தோய்ந்த அரிவாள் இருப்பது போலவும் படம் சென்றுள்ளதாம். மேலும், நடிகர் விஜய்யை பாடையில் கட்டி தூக்கிச் செல்வது போலவும் படங்களை மாறி மாறி அனுப்பியுள்ளார்களாம்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை இந்நிலையில், கோவில் திருவிழாவிற்கு வந்த மணிகண்டன் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் குழப்படைந்த காவல் துறையினர், ஜாதிய ரீதியில் கொலை நடந்ததா, ரசிகர்கள் பிரச்னையால் கொலை நிகழ்ந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை செய்யப்பட்டரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர்.

4 பேர் சரண்
இந்நிலையில், மணிகண்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேர் ராஜபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications