அபிராமிக்கு சிறையிலேயே முடிவு தெரிந்தாக வேண்டும்.. வக்கீல் ரூபத்தில் வந்த வில்லங்கம்!!
கள்ளக்காதலனுடனான உல்லாச வாழ்க்கைக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கள்ளக்காதலனுடனான உல்லாச வாழ்க்கைக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்காதல், காமவெறி உள்ளிட்டவற்றிற்கு அடிமையான அபிராமி கடந்த 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தனது இரண்டு குழந்தைகளை துடிதுடிக்க கொலை செய்தார்.
கணவரை கொல்ல அவர் போட்ட சதித்திட்டம் தோல்வியில் முடிந்ததால் 31ஆம் தேதி இரவு முதல் ஒன்றாம் தேதி அதிகாலை வரை கள்ளக்காதலனோடு ஜாலியாக இருந்துவிட்டு நாகர்கோவிலுக்கு தப்பினார்.

பெரும் அதிர்வலைகள்
அவரை கள்ளக்காதலனை வைத்தே கைது செய்தது போலீஸ். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. காமவெறியில் பெற்ற குழந்தைகளை அவர் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்நோக்கம் இல்லை
இந்நிலையில் அபிராமிக்கு எதிராக வழக்கறிஞர் தமிழ்வேந்தன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, இந்தப் புகார் மனுவில் எனக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது.

குண்டர் தடுப்பு சட்டம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தவறான நட்பால் கொலைகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டுமே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2 குழந்தைகள் கொலை
இதுபோன்ற குற்றங்கள், சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது. சமீபத்தில் குன்றத்தூரில் அபிராமி என்ற பெண், தன்னுடைய இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளார்.

இரும்புக்கரம் கொண்டு
எனவே, இந்தக் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு போலீஸார் தடுக்க வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காமவெறிக்கு முடிவு
அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. கைதானவர்கள் சிறைக்குள் இருக்கும் நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அபிராமியின் காமவெறிக்கு முடிவுகட்டும் வகையில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் இந்த புகாரை அளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications