ஸ்டெர்லைட் கலவரத்திற்கு வைகோ போன்றவர்களே காரணம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
கோவில்பட்டி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்திற்கு வைகோ போன்றவர்களே காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்தய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வருமான வரித்துறை சோதனைக்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லை.
தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்.
ஸ்டெர்லைட் கலவரத்திற்கு வைகோ போன்ற தலைவர்கள் தான் காரணம்.
வைகோ போன்ற தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தவறான தகவல்களை தந்ததே கலவரத்திற்கு காரணம். வைகோ பொறுப்புள்ள தலைவராக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!