தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு முக்கியசெய்தி..பள்ளி கல்வித்துறை வெளியிட்ட குட்நியூஸ்..வந்தாச்சு லீவு!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்தது. 12ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த 3ம் தேதி நிறைவு பெற்றது.
10ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த 30ம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்த இறுதித்தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து இன்றுடன் தேர்வுகள் முடிவதால், நாளை முதல் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது. மாணவர்களுக்கான கோடை விடுமுறை பள்ளி கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 1 மாதத்திற்கு தமிழ்நாட்டில் பள்ளிகள் செயல்பாடாது. 30 நாட்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெயில்:தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மாணவர்களுக்கு நிம்மதி கொடுக்கும் விதமாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சேலத்தில் 100.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் திடீரென உயர்ந்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 93 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. வேலூரில் 97 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. ஈரோடு, நாமக்கல்லில் 99 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வரும் நாட்களில் இந்த பகுதிகளில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட வெப்பநிலை என்பது கடந்த 10 நாட்களாக சராசரியாக பதிவான வெப்பநிலை ஆகும். சென்னையிலும் 100 டிகிரி பாரன்ஹீட் வரை தொடர்ந்து பதிவானது.

வெப்பநிலை:இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கமும் இருந்தது. வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை பல இடங்களில் உயர்ந்தது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தன.
வெப்ப காற்று காரணமாக வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. கடந்த 4 நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது . பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது.
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. மத்திய இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 37.78 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமேற்கு இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது.:
இது சராசரி அளவை விட 3.35 டிகிரி செல்சியாஸ் அதிகம் ஆகும். மும்பையில் தார் பாலைவனத்தில் இருப்பதை விட அதிக வெப்பநிலை பதிவானது. அங்கே 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications