கோவையில் காவல் நிலையங்களில் நூலக திட்டம்: எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்!
கோவையில் காவல்நிலையங்களில் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கோவை: இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் அமைத்துள்ள காவல் நிலையங்களில் "காவல் நிலையம்தோறும் நூலகம்" எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இத்திட்டத்தை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று துவக்கி வைத்தார்.

பல்வேறு தேவைகளுக்காக காவல் நிலையத்தை அணுகுகின்ற மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவதுடன் அவர்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். கோவையில் இயங்கி வருகின்ற 36 ரோட்டரி சுழற்சங்கங்கள் தங்கள் பகுதியில் அமைத்துள்ள 38 காவல் நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி பராமரிக்க உள்ளனர். மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சோலார்சக்தி மின்கலனையும் பயன்பாட்டுக்கு அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications