ஜூலைக்கு பின்தான் உள்ளாட்சித் தேர்தல் பற்றி அறிவிக்க முடியும்.. ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஜூலை மாத இறுதிக்கு பின்னரே அறிவிக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவிருந்த தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக் காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.

Local body election date announces end of July, State Election Commission

இந்நிலையில், சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை தமிழக அரசு நீட்டித்தது. இந்த நீட்டிப்புக் கூடாது என நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஜூலை மாத இறுதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலுக்கான பணிகள் இன்னும் முடியவில்லை என்றும் பணிகள் நிறைவடைந்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் திட்டவட்டமாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After July, local body election date will be announced, said State Election Commission in Madras High Court.
Please Wait while comments are loading...