தேடப்படும் நபர் கார்த்தி சிதம்பரம்.. அமலாக்கத்துறை, சிபிஐயின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேடப்படும் நபராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கு அனுமதி பெற்றுத் தந்ததில் முறைகேடு செய்ததாக கார்த்தி சிதம்பரம் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இவரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதுகுறித்து சிபிஜ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.

Look out notice issue to Karthi Chidambaram on Forex violations

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கார்த்தி சிதம்பரம் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதேநேரம், கார்த்தி சிதம்பரம் தனது கட்சி அலுவல்களை சிவகங்கை தொகுதியில் கவனித்து வருகிறார். புகைப்படத்தோடு இதை அவர் டிவிட் செய்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Look out notice issue to Karthi Chidambaram on Forex violations. Passports must be revoked once a case registered against anyone.
Please Wait while comments are loading...