For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டவர்கள் ஓட்டு போடலையே: தமிழிசை சவுந்தரராஜன்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வாக்குச்சாவடி வரைக்கும் அடாவடி அரசியல் நடக்கும்போது அடிதட்டு மக்களின் நலனுக்காக நேர்மையாக போட்டியிடும் கட்சிகளின் நேர்மை நிறைவடையாமல் போகிறது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தங்களின் வாக்கு வங்கி குறையவில்லை என்ற மகிழ்ச்சியில் உள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா. விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெபாசிட் இழந்தார்.

இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில்,

தேர்தல்

தேர்தல்

மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. தேர்தல் களத்தில் இறங்கி வேலைபார்த்த பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

மக்கள் புதிய ஆட்சியை தேர்வு செய்துள்ளனர். புதிய ஆட்சிக்கு தலைமை ஏற்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒற்றுமை

ஒற்றுமை

மாற்று அரசியலை முன் வைக்க விரும்பிய தலைவர்கள் முதலில் ஒற்றுமையை முன்வைக்க தவறியதால் தோல்வி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மாறுதலை ஏற்படுத்த நினைத்தது பாஜக. ஆனால் அது முடியாமல் போனது. அதற்காக பாஜகவினர் சோர்ந்துவிட மாட்டார்கள்.

அடாவடி அரசியல்

அடாவடி அரசியல்

பண பலமும், அதிகார பலமும் வலம் வருகையில் மற்றவர்களால் அதிக இடங்களை பிடிக்க முடியாமல் போகிறது. வாக்குச்சாவடி வரைக்கும் அடாவடி அரசியல் நடக்கும்போது அடிதட்டு மக்களின் நலனுக்காக நேர்மையாக போட்டியிடும் கட்சிகளின் நேர்மை நிறைவடையாமல் போகிறது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

மேல் தட்டு மக்களின் மேன்மையான ஓட்டுகள் கிடைக்காததால் மேம்பாடான மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. ஃபேஸ்புக்கில் போஸ்ட் போடுபவர்கள் விரல் நுனியில் மையிட்டுக் கொள்ளாததால் பொய் கூறும் கட்சிகளே அதிக இடங்களை பெறுகிறது.

English summary
BJP state president Tamilisai Soundararajan said that other parties couldn't secure more places because of attrocities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X