தீவிரவாத தாக்குதலை விட காதல் கொலைகள் அதிகம் ... தமிழகத்திற்கு 4வது இடம்
நாட்டில் காதல் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. ஆந்திரா முதலிடத்தில் உள்ளது.
சென்னை: தீவிரவாத தாக்குதலை விட நாட்டில் காதலர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவது, காதலன் காதலியை கொலை செய்வது என காதலுக்காக அரங்கேறும் கொலைகள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 20,000 பேர் பயங்கரவாதத்தால் உயிரிழந்தனர். ஆனால், பயங்கரவாதத்தால் உயிரிழப்பவர்களைவிட காதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கொலை, தற்கொலை மற்றும் பயங்கரவாத தாக்குதலைவிட, காதலால் ஏற்படுகின்ற மரணங்கள்தான் அதிகளவில் நடைபெறுகின்றன என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

காதல் கொலைகள்
காதலிக்க மறுத்த பெண் கொலை, சாதி மாறி காதலித்து திருமணம் செய்தவர்கள் படுகொலை, உறவினர்கள் சம்மதிக்காத காரணத்தால் காதல் ஜோடி தற்கொலை என நாடு முழுவதும் காதல் ஜோடிகளின் மரணம் அதிகரித்து வருகிறது.

எத்தனை கொலைகள்
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2001ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை காதலால் 38,585 கொலைகள், 79,189 தற்கொலைகள், 2.6 லட்சம் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன.

ஆந்திரா முதலிடம்
காதலுக்காக அதிகமான கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் ஆந்திராவும், இரண்டாவதாக உத்தரப்பிரதேசமும், மூன்றாவதாக மகாராஷ்டிராவும் இடம்பிடித்துள்ளன.

தமிழகம் 4வது இடம்
பெரும்பாலான காதல் கொலை, தற்கொலைகள் சாதிக் கட்டுபாடு, காரணத்தினால் நிகழ்ந்தவை என கூறப்படுகிறது. தமிழகம் இந்தப்பட்டியலில் நான்காவது இடத்தையும், மத்தியப்பிரதேசம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. காதலில் பிரிவு ஏற்படுதல், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற காரணங்களால் காதல் ஜோடிகள் பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.

காதல் தற்கொலைகள்
மேற்கு வங்கத்தில் காதல் கொலைகள் குறித்த எந்தவித புள்ளி விவரமும் கிடைக்கவில்லை. காதல் தற்கொலை செய்து கொள்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என கூறப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளில் 15,000க்கும் அதிகமான காதல் தற்கொலைகள் நடந்துள்ளன. இதில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications