காதல் திருமணம்.. பெற்ற மகளையே தீ வைத்து எரித்த அப்பா.. அத்தையும் கைது
மதுரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கொன்று எரித்ததாக அவரது தந்தையும், அத்தையும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை: மதுரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகளை நயவஞ்சகமாக பேசி வரவழைத்து பின்னர் அவரை கொன்று எரித்த வழக்கில் அவரது தந்தையும், அத்தையும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள வீராளம்பட்டியை சேர்ந்தவர் பெரியகார்த்திகேயன். இவருடைய மகள் சுகன்யா (21). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார்.
அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பூபதி (23) என்பவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

காதலுக்கு எதிர்ப்பு
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கண்டிப்பாக எதிர்ப்பு வலுக்கும் என்று இருவரும் நினைத்தனர். இதனால் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி பெருந்துறையில் உள்ள பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து ஈரோட்டில் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவர்களது திருமணத்தை சுகன்யா வீட்டார் ஏற்கவில்லை. ஆனால் பூபதி வீட்டார் ஏற்றுக் கொண்டனர்.

ஊர் திருவிழா
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி வீராளம்பட்டியில் நடைபெற்ற ஊர் திருவிழாவுக்காக புதுமணத் தம்பதியை ஊருக்கு வருமாறு சுகன்யா வீட்டார் அழைத்தனர். இதை நம்பிய அவர்கள் அங்கு ஊருக்கு சென்னர். அப்போது ஊர் எல்லையில் சுகன்யாவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் பூபதியை மிரட்டி துரத்திவிட்டனர்.

போலீஸில் புகார்
அதன் பிறகு, சுகன்யா என்ன ஆனார் என தெரியவில்லை. இதுகுறித்து பூபதி சேடப்பட்டி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் சுகன்யாவை அவரது கணவர் பூபதியிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தனர். எனினும் அவர்கள் ஒப்படைக்கவில்லை.

விஏஓ தகவல்
சுகன்யா கொல்லப்பட்டதாக தகவல்கள் பரவியதால் கிராம நிர்வாக அலுவலர் சேடப்பட்டி போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் பெரிய கார்த்திகேயன், அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெரிய கார்த்திகேயன், அவருடைய சகோதரர்கள் பாண்டி கண்ணன், சுந்தரம், சுகன்யாவின் அத்தை லட்சுமி ஆகியோர் சுகன்யாவை கொலை செய்து ஓடையில் வைத்து உடலை எரித்தது தெரியவந்தது.

தடயவியல் சோதனை
அவர்கள் கூறிய இடத்துக்கு சென்று போலீஸார் பார்த்தபோது மனித எலும்புகள் சிக்கின. தடயவியல் நிபுணர் குழுவினர் எலும்புகளை சேகரித்து பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக சுகன்யாவின் தந்தை பெரியகார்த்திகேயன், அத்தை லட்சுமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். சகோதரர்கள் பாண்டிக்கண்ணன், சுந்தரம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications