சென்னை பூவிருந்தவல்லியில் காதல் தம்பதி தற்கொலை: 2 பிஞ்சு பெண் குழந்தைகளை விட்டுச்சென்ற பரிதாபம்!
சென்னை பூவிருந்தவல்லியில் காதல் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னை: பூவிருந்தவல்லியில் வசித்து வந்த வெங்கடேசன், துர்கா தம்பதியினர் காதல் திருமணம் செய்தவர்கள். இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
குடி பழக்கம் இருக்கும் வெங்கடேசன் மனைவி துர்காவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. தாய் இல்லாத பெண்ணான துர்கா தனது பாட்டி மீரா பாய்யிடம் குழந்தைகளை விடுவது வழக்கம்.

அந்த வகையில் குழந்தைகளை மீண்டும் துர்காவிடம் விடுவதற்காக அதிகாலையில் மீரா பாய் வந்திருந்தார். அவர் நீண்ட நேரம் கதவுகளை தட்டியும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்தார்.
[பிறந்தநாளில் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்ட காதலி.. விசாரணையில் அம்பலமான திடுக் தகவல்! ]
அப்போது வெங்கடேசன் தூக்கில் தொங்கியபடியும் துர்கா கட்டிலில் சடலமாகவும் கிடந்தனர். இதனைக் கண்டு கத்தி கூச்சலிட்டார் மீராபாய். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குவந்த காவல்துறையினர் கதவை உடைத்து இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். உலக பெண்குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விவரம் தெரியாத இரண்டு பெண் குழந்தைகளை விட்டுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications