தென்கிழக்கு அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று மூன்றாவது நாளாக மழை நீடிக்கிறது. விடிய விடிய கொட்டும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

கனமழை பெய்துள்ளது
அப்போது அவர் தெரிவித்ததாவது, தென் தமிழக பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக கடந்த 24 மணி நேரம் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

8ஆம் தேதி வரை நீடிக்கும்
இந்நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும்.

புயலாக மாறும்
இதனிடையே தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2, 3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக மாறும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
பின்னர் இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஓமன் நோக்கி செல்லும். இதனால் கடலில் பலத்த காற்று வீசும் மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் அக்டோபர் 8ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications