நடிகர் கஞ்சா கருப்புவுடன் போய் வேட்பு மனு தாக்கல் செய்த சினிமா கவிஞர்!
கோடம்பாக்கவாசிகள், சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் கேகே நகர் பகுதி மக்களுக்கு பரிச்சயமான கவிஞர் கிச்சனை நடத்தி வருபவரும், பாடலாசிரியருமான ஜெயங்கொண்டான் நேற்று ஜெயங்கொண்டம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஜெயங்கொண்டானின் இயற்பெயர் மகேஷ். ஊர்ப் பாசம் காரணமாக ஜெயம் கொண்டான் என்று பெயரை மாற்றிக் கொண்டார்.

ஒரு பக்கம் சினிமா முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே, கேகே நகரில் உணவகம் திறந்தார். அது திரையுலகினருக்கு மிகவும் பரிச்சயமான உணவகமாகிவிட்டது. நடிகர் கஞ்சா கருப்பு, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி என ஏகப்பட்ட பேர் இவருக்கு ஆதரவு தந்தனர்.
புதுப் படங்களை தியேட்டர்களில் பார்த்துவிட்டு தன் உணவகத்துக்கு வந்து அந்த டிக்கெட்டைக் காட்டினால் தள்ளுபடி, இல்லாதவர்களுக்கு உதவி என தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வந்தார்.
இப்போது தேர்தலில் களமிறங்கியுள்ளார். வேட்பு மனு தாக்கலுக்கு முன்பிருந்தே சுயேச்சை வேட்பாளராக தொகுதி முழுக்க சுற்றி வந்து வாக்கு சேகரித்து வந்தார்.

நேற்று அவர் நடிகர் கஞ்சா கருப்பு துணையுடன் ஜெயங்கொண்டம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தனக்காக இன்னும் சில நட்சத்திரங்கள் இந்தத் தொகுதியில் வாக்குச் சேகரிக்க வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த ஜெயங்கொண்டான், என் சொந்த சம்பாத்தியத்தை வைத்து இந்தத் தொகுதி மக்களுக்கு நிறைய செய்திருக்கிறேன். எனக்கு அதிகாரமிருந்தால், இந்தத் தொகுதியை முன் மாதிரியாக்குவேன் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications