துணைவேந்தர் நியமனம் தமிழகத்தை தனிமைப்படுத்தவா? தனிப்படுத்தவா?... வைரமுத்து சுளீர் கேள்வி!
துணைவேந்தர் பதவிக்குமா ஒரு தமிழருக்கு தகுதியில்லை என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை : இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. துணைவேந்தர் பதவிக்குமா ஒரு தமிழருக்குத் தகுதியில்லை? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் எத்தனையோ சிறந்த பேராசிரியர்கள் இருந்தும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டது ஆளுநர் உள்நோக்கத்துடன் மேற்கொண்ட நடவடிக்கை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சூரப்பா நியமனம் குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் காட்டமான கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. துணைவேந்தர் பதவிக்குமா ஒரு தமிழருக்குத் தகுதியில்லை? இதுபோன்ற செயல்களெல்லாம் தமிழகத்தைத் தனிமைப்படுத்தவா? தனிப்படுத்தவா? என்றும் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications