சென்னையைக் கலக்கிய அழகிரி பேரணி.. அண்ணா, கருணாநிதி சமாதியில் அஞ்சலி
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி நடத்திய அமைதி பேரணி விரைவாக முடிந்துள்ளது.
Recommended Video

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி நடத்திய அமைதி பேரணி விரைவாக முடிந்துள்ளது.
இன்று மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்தி உள்ளார். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி முடிந்துள்ளது.
இதற்காக கடந்த ஒரு வாரமாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார் அழகிரி. இதற்காக சில மதுரை நிர்வாகிகள் நேற்றே, சென்னைக்கு சென்று ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

நேற்று சென்னை வந்தார்
இதற்காக நேற்று அதிகாலை அழகிரி சென்னை விமான நிலையம் வந்தார். பின் தனியார் ஹோட்டலில் சென்று தாங்கினார். இந்த நிலையில் இன்று காலை இந்த பேரணி தொடங்கி உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் பேரணி நடத்த திட்டமிட்டு, 11.30க்கு பேரணி தொடங்கியது.

சென்னையில் பெரிய அளவில் ஏற்பாடுகள்
இதற்காக சென்னையில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பேரணி நடக்க உள்ள இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் இடம்பெற்று உள்ளது. அதேபோல் வித்தியாசமான வசனங்களுடன் கட் அவுட்கள் வைக்கப்பட்டது.

எந்த இடத்தில்
இந்த அமைதி பேரணி திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து அமைதி பேரணி கருணாநிதி நினைவிடத்தில் முடிந்துள்ளது. பாதுகாப்பு கருதி இவர்கள் அமைதி பேரணிக்கு திட்டமிட்டு இருந்த தூரம் குறைக்கப்பட்டது. இதனால் தாமதமாக தொடங்கி விரைவாக முடிந்தது பேரணி.

போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் இங்கு பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். மூன்று 3 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள்
இதில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வளவு பேர் வந்து இருக்கிறார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது. குறைந்தது 10 ஆயிர பேராவது கலந்து கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பேரணி வாலாஜா சாலை வழியாக கடற்கரை சாலை சென்று மெரினாவில் முடிந்தது.

அஞ்சலி செலுத்தினார்
பேரணியின் முடிவில் அண்ணா, கருணாநிதி சமாதியில் அழகிரி அஞ்சலி செலுத்தினார். முதலில் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அழகிரி.
-
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications