என் பெற்றோர்கள் மீதான அக்கறைக்கு நன்றி... பிரதமர் மோடிக்கு அழகிரி கடிதம்
என் பெற்றோர் மீது நீங்கள் எடுத்துக்கொண்ட அதீத அக்கறைக்கு நன்றி என்று பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் அழகிரி.
Recommended Video

சென்னை: என் பெற்றோரை உங்களுடன் வந்து இருக்குமாறு அழைப்பு விடுத்ததன் மூலம் அவர்களின் உடல்நல முன்னேற்றத்துக்கு கண்டிப்பாக ஊக்கமளிக்கும் என்று பிரதமருக்கு முன்னாள் அமைச்சர் அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்திருந்தார். தினத்தந்தியின் பவள விழா மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரியின் மகள் திருமண விழா பங்கேற்ற மோடி கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
தயாளுஅம்மாளையும் சந்தித்து பேசினார். ஓய்வெடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு இருவரையும் மோடி அழைப்பு விடுத்தார்.

அழகிரி நன்றி கடிதம்
இதற்கு முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில் தனிப்பட்ட முறையில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேரில் வர இயலவில்லை
என் பெற்றோர்மீது நீங்கள் எடுத்துக்கொண்ட அதீத அக்கறைக்கு நன்றி. நீங்கள் என் பெற்றோரைப் பார்க்க வருவது எனக்கு முன்கூட்டியே தெரியாததால், உங்களை நேரில் வரவேற்க என்னால் சென்னைக்கு வர இயலாமல்போனது.

உடல் நலம் முன்னேற்றமடையும்
நீங்கள் நேரில் வந்து என் பெற்றோரைப் பார்த்ததுடன், உங்களுடன் வந்து இருக்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் அவர்களின் உடல் நல முன்னேற்றத்துக்கு கண்டிப்பாக ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார்.

அழகிரி பாராட்டு
இந்தியாவை புதிய உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் நீங்கள் கொண்டுள்ள உறுதிப்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்களுக்கு, என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அழகிரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications